
கே.எல்.ராகுல் ரிஷப் பந்த் குறித்து பேசும்போது, “ரிஷப் பந்த் தனித்துவமானவர்” எனக் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்ஸில் இந்தியா 471 சேர்க்க, இங்கிலாந்து 465 சேர்த்தது. இரண்டாம் இன்னிங்ஸில் இந்தியா 364 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து வெற்றிபெற 350 ரன்களும், இந்தியாவின் வெற்றிக்கு 10 விக்கெட்டுகளும் தேவைப்படுகின்றன.
முதல் இன்னிங்ஸில் சதமடித்த ரிஷப் பந்த் (134) இரண்டாவது இன்னிங்ஸிலும் (118) சதமடித்தார்.
முதல் இன்னிங்ஸை விட இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி சதமடித்தார்.
டெஸ்ட் போட்டி ஒன்றின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய முதல் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவர் படைத்தார்.
இது குறித்து கே.எல். ராகுல், “ நீங்கள் அவர் அடிப்பதை பார்த்து பிரமித்து நிற்கலாம். அவர் விளையாடும் ஷாட் தேர்வுகள் குறித்து சில நேரங்களில் தலையை சொறிந்துக் கொள்ளலாம். அடாவடியான கிரிக்கெட்டை விளையாடுகிறார். அவர் தனித்துவமான வீரர், அவரை அவராகவே இருக்க விடுங்கள்” எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.