100 கோடி பார்வையாளர்களை ஈர்த்தது எப்படி? ஜியோ ஹாட்ஸ்டார் சிஇஓ விளக்கம்!

ஜியோ ஹாட்ஸ்டாரின் ஸ்போர்ட்ஸ் & லைவ் எக்ஸ்பிரீயன்ஸ் சிஇஓ கூறியதாவது...
Jio Hotstar CEO speaking at APOS event...
ஜியோ ஹாட்ஸ்டார் சிஇஓ ஏபிஓஎஸ் நிகழ்ச்சியில் பேசியபோது... படம்: ஏபிஓஎஸ்
Published on
Updated on
1 min read

ஐபிஎல் போட்டிகளின்போது 100 கோடி பார்வையாளர்களை ஈர்த்தது எப்படி என ஜியோ ஹாட்ஸ்டாரின் ஸ்போர்ட்ஸ் & லைவ் எக்ஸ்பிரீயன்ஸ் சிஇஓ சஞ்சோக் குப்தா பேசியுள்ளார்.

ஐபிஎல் 2025-இல் ஆர்சிபி அணி 18 ஆண்டுகளில் முதல்முறையாக கோப்பையை வென்றது.

இந்த 2025 ஐபிஎல் சீசனில் ஜியோ ஹாட்ஸ்டார் 280 பில்லியன் சப்ஸ்கிரைபர்களை நெருங்கி சாதனை படைத்தது. பலவிதமான புது புது தொழில்நுட்பங்களை ஐபிஎல் ரசிகர்கள் ரசித்து பார்த்தார்கள்.

இது குறித்து ஜியோ ஹாட்ஸ்டாரின் சிஇஒ சஞ்ஜோக் குப்தா ஏபிஓஎஸ் நிகழ்ச்சியில் பேசியதாவது:

வழக்கமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியை விட பார்வையாளர்களுக்கு முக்கியத்துவம் அளித்து நிகழ்ச்சிகளை தயாரித்தோம்.

ஒரே நேரத்தில் அனைத்து ரசிகர்களுக்கும் ஏற்ப சேவையை வழங்க நினைக்கவில்லை. முடிந்த அளவுக்கு அனைவரையும் திருப்திபடுத்தும் வேலைகளை செய்தோம்.

ஓவ்வொருவரும் ஒரே நேரத்தில் பல வகையான சாதனங்களில் போட்டிகளை பார்த்து மகிழ்ந்தார்கள்.

இந்த யுக்தி பெரிதாக எங்களுக்கு பயனளித்தது. ஜியோ ஹாட்ஸ்டார் ஐபிஎல் 2025-இல் 100 கோடி பார்வையாளர்களைக் கடந்தது. அது மட்டுமில்லாமல் இந்தியாவிலேயே அதிகமாக வசூலித்த விளையாட்டு எடிஷன் என்றால் அது ஐபிஎல் 2025 மட்டுமே.

முதலில் இலவசமாக அளித்து, அவர்களுக்கு விருப்பமெனில் பிறகு வாங்க வைக்க வேண்டும். இது நிஜ வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்டது. கடைகளில் இருக்கும் யுக்திதான் என்றார்.

  • மொத்த ரீச்: 1.19 பில்லியன்

    • தொலைக் காட்சியில் 537 மில்லியன்

    • டிஜிட்டலில் 652 மில்லியன்

  • ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பார்வையாளர்களில் 47% பெண்கள்

  • ஐபிஎல் இறுதிபோட்டி ரீச்:

    • மொத்தம் - 426 மில்லியன்

    • டிவி: 189 மில்லியன்

    • டிஜிட்டல்: 237 மில்லியன்

  • ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாதாரர்கள்: 300 மில்லியன்

  • ஆண்ட்ராய்டு தரவிறக்கம்: 1.04 பில்லியன்

  • உச்சநேர பார்வை: 55.2 மில்லியன்

  • CTV ரீச்: 235 மில்லியன்

  • மொபைல் ரீச்: 417 மில்லியன்

  • பார்வைக்காலம்: 514 பில்லியன் நிமிடங்கள்

  • ஸ்டார் ஸ்போர்ட்ஸ் HD பார்வையாளர்கள்: 129 மில்லியன்

  • மொத்தம்: 840 பில்லியன் நிமிடங்கள்

தொழில்நுட்ப முன்னேற்றங்கள்

  • 16:9 மல்டி கேமிரா பார்வைகள்: பேட்டர்கள் கேமிரா, பௌலர் கேமிரா, ஸ்டம்ப் கேமிரா, ஹோரோ கேமிரா.

  • 360° / விஆர் ஸ்ட்ரீமிங்: JioDive உடன் முழுமையான அனுபவம்

  • மேக்ஸ் விவ் 3.0 (MaxView 3.0) : ஸ்வைப் செய்யக் கூடிய வெர்டிகல் பார்வை

  • CTV-இல் Voice Search: குரல்வழித் தேடல்

  • FAST சேனல்கள்: இலவச விளம்பர ஆதரவு கொண்ட ஐபிஎல் சேனல்கள்

  • ஏஐ சார்ந்த ஹைலைட்ஸ்: போட்டிக்குப் பிறகு சில நிமிடங்களில் தானாக உருவாகும் ஹைலைட்ஸ்

  • ஏஐ மொழிபெயர்ப்பு: நேரடி பேச்சாளர்களை பலமொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து வழங்கும் வசதி

  • Audio Commentary: பார்வையற்றோருக்கான விளக்கம்

  • ISL (Indian Sign Language): ஒளிபரப்புகளில் சைகை மொழிபெயர்ப்பு 

ஈடுபாடு

  • மேக்ஸ் விவ் 3.0 (Max View 3.0) : மொபைல் பார்வையாளர்களில் 30% பயன்படுத்தினர்.

  • பிராந்திய மொழிகளில் கூடுதல் வளர்ச்சி (YoY):

  • ஹிந்தி: +31%

  • தெலுங்கு: +87%

  • தமிழ்: +52%

  • கன்னடம்: +65%

  • வங்காளம்: +34%

  • ஹரியானா: +47%

  • சமூக ஊடக இடையினங்கள்: 3.83 பில்லியன்

  • ‘Jeeto Dhan Dhana Dhan’ விளையாட்டு:  மொபைல் பார்வையாளர்களில் 44% ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com