முதல் டெஸ்ட்: மே.இ.தீ., ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு!

மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி குறித்து...
Captains of the Aussie and West Indies teams
ஆஸி.மற்றும் மே.இ.தீ. அணியின் கேப்டன்கள். படம்: ஐசிசி
Published on
Updated on
1 min read

மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட், 5 டி20 போட்டிகளில் விளையாடுகின்றன.

முதல் டெஸ்ட் இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்தப் போட்டிக்கான பிளேயிங் லெவனை முதலில் ஆஸி. அணி அறிவித்தது. பின்னர், மே.இ.தீ. அணி அறிவித்தது.

ரோஷ்டன் தலைமையில் மே.இ.தீ. அணியும் கம்மின்ஸ் தலைமையில் ஆஸி. அணியும் மோதுகின்றன.

மே.இ.தீ. அணியில் ஷாய் ஹோப் 2021-க்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ளார்.

ஆஸி. அணியில் ஸ்மித், லபுஷேனுக்குப் பதிலாக சாம் கான்ஸ்டாஸ், இங்கிலீஷ் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

மேற்கிந்தியத் தீவுகள்: 1. கிரெய்க் பிரெத்வெய்ட், 2. ஜான் காம்பெல், 3. கெய்சி கார்டி, 4. பிரெண்டன் கிங், 5. ரோஷ்டன் சேஷ் (கேப்டன்), 6. ஷாய் ஹோப் (கீப்பர்), 7. ஜஸ்டின் கிரீவ்ஸ், 8. ஜோமோல் வாரிகன், 9. அல்ஜாரி ஜோசப், 10. ஷமேர் ஜோசப், 11. ஜயதேன் சீல்ஸ்.

ஆஸ்திரேலியா: 1. உஸ்மான் கவாஜா, 2. சாம் கான்ஸ்டாஸ், 3. கேமரூன் கிரீன், 4. ஜோஷ் இங்லீஷ், 5. டிராவிஸ் ஹெட், 6. பியூ வெப்ஸ்டர், 7. அலெக்ஸ் கேட்ரி (கீப்பர்), 8. பாட் கம்மின்ஸ் (கேப்டன்), 9. மிட்செல் ஸ்டார்க், 10. நாதன் லயன், 11. ஜோஷ் ஹேசில்வுட்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com