180-க்கு சுருண்ட ஆஸி: 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் மே.இ.தீ.!

மேற்கிந்தியத் தீவுகள் - ஆஸி. விளையாடிவரும் முதல் டெஸ்ட் போட்டி குறித்து...
Australia's Mitchell Starc celebrates taking the wicket of West Indies' John Campbell during day one of the first cricket Test match at Kensington Stadium in Bridgetown, Barbados,
விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் ஆஸி. வீரர்கள். படம்: ஏபி
Published on
Updated on
1 min read

மேற்கிந்தியத் தீவுகள் - ஆஸி. மோதும் முதல் டெஸ்ட் போட்டி சுவாரசியமாகச் சென்று கொண்டுள்ளது.

முதல் இன்னிங்ஸில் ஆஸி. 180 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, மே.இ.தீ. அணி 20 ஓவர்கள் முடிவில் 57 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்திய நேரப்படி நேற்றிரவு 7.30 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டி நள்ளிரவு 3 மணி வரைச் சென்றது.

முதல் இன்னிங்ஸில் ஆஸி. சார்பாக டிராவிஸ் ஹெட் அரைசதமடிக்க, மே.இ,தீ. அணி சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

ஷமார் ஜோசப் டாப் ஆர்டர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல்நாள் முடிவில் 123 ரன்கள் பின்னிலையில் இருக்கிறது.

மே.இ.தீ. முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் கார்டு

கிரெய்க் பிரெத்வெய்ட் - 4

ஜான் காம்பெல் - 7

கெய்சி கார்டி - 20

பிரெண்டன் கிங் - 23*

ஜோமெல் வாரிகன் - 0

ரோஷ்டன் சேஷ் - 1*

ஆஸி. சார்பில் மிட்செல் ஸ்டார்க் 2, பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் தலா 1 விக்கெட்டும் எடுத்து அசத்தினார்கள்.

Summary

The first Test match between West Indies and Australia has been going interestingly. west indies trail by 123 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com