கேப்டனாக பாட் கம்மின்ஸ் புதிய சாதனை!

ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் நிகழ்த்திய சாதனை குறித்து...
Australia's captain Pat Cummins prepares to bowls against West Indies on day two of the first cricket Test match at Kensington Stadium
ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ். படம்: ஏபி
Published on
Updated on
1 min read

ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்ற ஆஸி. பேட்டிங் தேர்வு செய்து 180 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டாக, அடுத்து விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிவரும் ஆஸி. அணி 33 ஓவர்களுக்கு 92 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

கேப்டனாக கம்மின்ஸ் 139 விக்கெட்டுகளை நிறைவு செய்துள்ளார். இதன்மூலம், கேப்டனாக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் உலக அளவில் 2-ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

ஆஸி. நாட்டைச் சேர்ந்தவர்களில் கம்மின்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். இதற்கு முன்பாக ஆஸி. வீரர் ரிச்சி பெனௌட் கேப்டனாக 138 விக்கெட்டுகள் எடுத்திருந்தார்.

கேப்டனாக அதிக டெஸ்ட் விக்கெட் எடுத்தவர்கள்

1. இம்ரான் கான் - 187 (பாகிஸ்தான்)

2. பாட் கம்மின்ஸ் - 139 (ஆஸி.)

3. ரிச்சர்ட் பெனௌட் - 138 (ஆஸி.)

4. கேரி சோபர்ஸ் - 117 (மே.இ.தீ.)

5. டேனியல் வெட்டோரி - 116 (நியூசி.)

summary

Pat Cummins surpasses Richard Benaud and is now only behind Imran Khan for the most Test wickets by a captain!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com