முத்தரப்பு தொடர்: தெ.ஆப்பிரிக்க அணியில் சிஎஸ்கே நம்பிக்கை நட்சத்திரம்!

முத்தரப்பு தொடரில் தென்னாப்பிரிக்க அணியில் சிஎஸ்கே வீரருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
டெவால்ட் பிரீவிஸ்.
டெவால்ட் பிரீவிஸ்.படம் - சிஎஸ்கே
Published on
Updated on
1 min read

முத்தரப்பு தொடரில் தென்னாப்பிரிக்க அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் நடைபெறுகிறது. இந்தத் தொடர் ஜூலை 14 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிகள் ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் நடைபெறுகின்றன.

இந்தத் தொடருக்காக 14 பேர் கொண்ட தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய முகங்களுக்கு அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. புதிய பயிற்சியாளர் சுக்ரி கான்ராட்டும் அணியில் இணைந்துள்ளார். இந்த முத்தரப்பு தொடருக்கான கேப்டனாக அனுபவம் வாய்ந்த வான் டெர் டுசென் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், புது முகங்களாக கார்பின் போர்ஷ், லுவான் ட்ரே பிரிட்டோரியஸ், ரூபின் ஹெர்மன், செனுரன் முத்துசாமி ஆகியோருக்கு அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஆக்ரோஷமாகவும், பேபி ஏபிடி என அழைக்கப்படுபவருமான டெவால்ட் பிரீவிஸுக்கு அணியில் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடரின் பாதியில் இணைந்து சிறப்பாக விளையாடி இந்தியாவில் தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுள்ளார் பிரீவிஸ்.

டெவால்ட் பிரீவிஸுக்கு 2023 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தற்போது தென்னாப்பிரிக்க டி20 அணியில் இடம் கிடைத்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணி விவரம்

வான்டர் டுசென் (கேப்டன்), கார்பின் போஷ், டெவால்ட் ப்ரீவிஸ், நான்ட்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரூபின் ஹெர்மன், ஜார்ஜ், லிண்டே, க்வேனா மபாகா, லுங்கி இன்கிடி, நகாபா பீட்டர், பிரிட்டோரியஸ், அண்டில் சிமெலேன், செனுரன் முத்துசாமி.

Summary

A tri-nation T20 series is underway between South Africa, New Zealand and Zimbabwe. The series will start on July 14 and will continue until July 26. The matches will be held in Harare, the capital of Zimbabwe.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com