பார்படாஸ் டெஸ்ட்: ஹேசில்வுட் அசத்தல், ஆஸி. 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஆஸி. வென்றது குறித்து...
Australia's Josh Hazlewood raises the ball after taking the wicket of West Indies' Jomel Warrican, his fifth of the innings,
5 விக்கெட்டுகளை வீழ்த்திய மகிழ்ச்சியில் பந்தை தூக்கிக்காட்டும் ஹேசில்வுட். பாராட்டும் சக ஆஸி. வீரர்கள். படம்: ஏபி
Published on
Updated on
1 min read

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸி. அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸி. அணி 3 டெஸ்ட், 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி முதல் டெஸ்ட் கடந்த ஜூன் 25-இல் பார்படாஸில் தொடங்கியது.

டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸில் 180-க்கு ஆல் அவுட்டாக, மே.இ.தீ. அணி 190-க்கு ஆல் அவுட்டானது.

இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டெழுந்த ஆஸி. அணி 300 ரன்களை அடித்து அசத்தியது.

இருப்பினும் 2 நாள்கள் மீதமிருந்த நிலையில் மே.இ.தீ. அணி 3ஆம் நாள் முடிவிலேயே 141-க்கு ஆல் அவுட்டாகி சொதப்பியது.

ஜோஷ் ஹேசில்வுட் இரண்டாம் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்தார். லயன் 2, ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.

மே.இ.தீ. அணியில் அதிகபட்சமாக ஷமர் ஜோசப் 44 ரன்கள் அடித்தார். அவர் பந்துவீச்சிலும் கலக்கியது குறிப்பிடத்தக்கது.

இறுதியில், ஆஸி. அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

முதல் டெஸ்ட்டின் ஆட்ட நாயகனாக இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்த டிராவிஸ் ஹெட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Summary

The Aussies won the first Test against the West Indies by 159 runs. in second innings Hazlewood take five wickets haul makes aussie easy win.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com