நடுவரை விமர்சித்ததால் மே.இ.தீ. அணியின் பயிற்சியாளருக்கு அபராதம்!

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பயிற்சியாளருக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்து...
Darren Sammy
டேரன் சமிபடம்: எக்ஸ் / டேரன் சமி.
Published on
Updated on
1 min read

நடுவரை விமர்சித்ததால் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பயிற்சியாளர் டேரன் சமிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸி. அணி மே.இ.தீ. அணிகளுக்கு எதிரான முதல் போட்டியில் 159 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்தப் போட்டியில் டிராவிஸ் ஹெட் விக்கெட் போன்ற சில முடிவுகளால் நடுவர்களின் தீர்ப்புகள் சர்ச்சையானது.

இந்த விவகாரத்தில் மே.இ.தீ. அணியின் பயிற்சியாளர் டேரன் சமி போட்டி முடிந்தபிறகு பேசும்போது கடுமையாம விமர்சித்து பேசினார்.

கேட்ச், டிஆர்எஸ் முடிவுகளில் இரண்டு அணிக்குமே நடுவர்கள் சரியாக தீர்ப்பளிக்கவில்லை எனவும் பேசியதால் சர்ச்சையானது.

மே.இ.தீ. அணிக்கு உலகக் கோப்பை வென்று தந்த 41 வயதாகும் டேரன் சமிக்கு நடுவரை விமர்சித்ததால் போட்டிக்கான ஊதியத்திலிருந்து 15 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

பாட் கம்மின்ஸ் விக்கெட் எடுத்த மே.இ.தீ. அணி வீரர் ஜெய்டென் சீல்ஸ் ஐசிசி நடத்தை விதிகளை மீறியதால் அவருக்கும் 15 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என ஆஸி. முன்னிலை வகிக்கிறது.

Summary

West Indies coach Daren Sammy has been fined 15% of his match fee after publicly criticizing TV umpire Adrian Holdstock during the first test against Australia in Barbados.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com