
தென்னாப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜ் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் நேற்று (ஜூன் 28) தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி அதன் முதல் இன்னிங்ஸில் 418 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து, ஜிம்பாப்வே அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
வரலாறு படைத்த கேசவ் மகாராஜ்
ஜிம்பாப்வே அணி அதன் முதல் இன்னிங்ஸில் 200 ரன்களைக் கடந்து விளையாடி வரும் நிலையில், தென்னாப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜ், அந்த அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் வரலாறு படைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் சுழற்பந்துவீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார். ஜிம்பாப்வே அணியின் கேப்டன் கிரைக் எர்வின், கேசவ் மகாராஜின் 200-வது டெஸ்ட் விக்கெட்டாக மாறினார்.
இதுவரை தென்னாப்பிரிக்க அணிக்காக 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கேசவ் மகாராஜ், 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதில் 11 ஐந்து விக்கெட்டுகள் மற்றும் ஒரு பத்து விக்கெட்டுகள் அடங்கும்.
South African spinner Keshav Maharaj has set a new record in Test cricket.
இதையும் படிக்க: டி20 வடிவிலான போட்டி என்னுடைய பலம் கிடையாது: ஸ்மிருதி மந்தனா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.