டி20 வடிவிலான போட்டி என்னுடைய பலம் கிடையாது: ஸ்மிருதி மந்தனா

டி20 வடிவிலான போட்டி தன்னுடைய பலம் கிடையாது என இந்திய அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
smiriti mandhana
ஸ்மிருதி மந்தனாகோப்புப் படம்
Published on
Updated on
1 min read

டி20 வடிவிலான போட்டி தன்னுடைய பலம் கிடையாது என இந்திய அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று (ஜூன் 28) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சர்வதேச டி20 போட்டிகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்த கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுக்கு ஆட்டநாயகி விருது வழங்கப்பட்டது.

ஸ்மிருதி மந்தனா கூறியதென்ன?

சர்வதேச டி20 போட்டியில் முதல் சதம் விளாசிய நிலையில், சர்வதேச டி20 போட்டியில் சதம் விளாசியது சிறப்பான உணர்வைத் தருவதாகவும், இயல்பாகவே டி20 வடிவிலான போட்டி தன்னுடைய பலம் கிடையாது எனவும் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: சர்வதேச டி20 போட்டிகளில் முதல் சதம் விளாசியது மிகவும் சிறப்பான உணர்வைத் தருகிறது. ஏனெனில், டி20 வடிவிலான போட்டிகள் என்னுடைய பலம் கிடையாது. டி20 போட்டிகளில் நான் தொடர்ச்சியாக என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ள முயற்சி செய்து வருகிறேன். நான் பெரிய ஷாட்டுகள் விளையாடும் நபர் கிடையாது. பந்தினை டைம் செய்து விளையாடுவது எனக்குப் பிடிக்கும். அதனால், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கே என்னுடைய பேட்டிங் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். ஆனால், டி20 வடிவிலான போட்டிகளில் சதம் விளாசியுள்ளது மிகவும் சிறப்பான விஷயம். டி20 போட்டிகளுக்கு ஏற்றவாறு பந்தினை அதிரடியாக அடித்து விளையாட முயற்சி செய்து வருகிறேன் என்றார்.

தனது முதல் டி20 சதத்தை ஸ்மிருதி மந்தனா அவரது 149-வது போட்டியில் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்றையப் போட்டியில் அவர் 62 பந்துகளில் 112 ரன்கள் எடுத்தார்.

Summary

Smashing a maiden T20I century against England was "pretty special" as the shortest format is "not one of my strengths", said India stand-in skipper Smriti Mandhana.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com