
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரிஷப் பந்த் விளையாட முடியாதது மிகவும் கடிமனமாக இருப்பதாக அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டொஸ்சாட் தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இதுவரையிலான போட்டிகளில் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது. முதல் போட்டியில் வங்கதேசத்தையும், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானையும் வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கே.எல்.ராகுல் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நடுவரிசை ஆட்டக்காரராகவும் கே.எல்.ராகுல் அணிக்கு பலம் சேர்க்கிறார். கே.எல்.ராகுல் சிறப்பாக செயல்படுவதால், ரிஷப் பந்த் பிளேயிங் லெவனில் இடம்பெற்று அணிக்காக விளையாட முடியவில்லை.
உதவிப் பயிற்சியாளர் கூறுவதென்ன?
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரிஷப் பந்த் விளையாட முடியாதது மிகவும் கடினமாக இருப்பதாக இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டொஸ்சாட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணிக்காக ரிஷப் பந்த் பிளேயிங் லெவனில் விளையாட முடியாதது மிகவும் கடினமாக இருக்கிறது. ஆனால், இது போன்ற தொடர்களில் இவ்வாறு நடப்பதை தவிர்க்க முடியாது. கே.எல்.ராகுல் நன்றாக செயல்படுகிறார். அவருக்கு அதிக அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ரிஷப் பந்த்தும் பயிற்சியில் ஈடுபடுகிறார். அவரை எப்போது அணியில் பயன்படுத்துவோம் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால், அணியில் இரண்டு சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் இருப்பது மிகவும் சிறப்பான விஷயம் என்றார்.
இந்திய அணி அதன் கடைசி குரூப் ஸ்டேஜ் போட்டியில் நாளை (மார்ச் 2) நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.