வருண் சக்கரவர்த்தி தாக்கத்தை ஏற்படுத்த இதுவே சரியான தருணம்: ரவி சாஸ்திரி

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் வருண் சக்கரவர்த்தி பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட வேண்டும்.
வருண் சக்கரவர்த்தி தாக்கத்தை ஏற்படுத்த இதுவே சரியான தருணம்: ரவி சாஸ்திரி
படம் | AP
Published on
Updated on
2 min read

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் வருண் சக்கரவர்த்தி பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடைசி குரூப் ஸ்டேஜ் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேற்று விளையாடின. இந்தப் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இந்திய அணியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

பிளேயிங் லெவனை மாற்ற வேண்டாம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை அரையிறுதிப் போட்டியில் விளையாடவுள்ள நிலையில், இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய அதே பிளேயிங் லெவனுடன் அரையிறுதிப் போட்டியில் களமிறங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

ரவி சாஸ்திரி
ரவி சாஸ்திரிகோப்புப் படம்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வருண் சக்கரவர்த்தி மிகவும் அற்புதமாக பந்துவீசினார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வருண் சக்கரவர்த்தியை பிளேயிங் லெவனில் இடம்பெற வைக்க வேண்டும் என்ற சரியான முடிவை எடுத்த இந்திய அணி நிர்வாகத்துக்கு முழு மதிப்பெண்கள் கொடுக்கலாம். ஏனெனில், வருண் சக்கரவர்த்தி மிடில் ஓவர்களில் நன்றாக விக்கெட் எடுக்கக் கூடியவர்.

வருண் சக்கரவர்த்தியின் அபார திறமையை இந்திய அணி பயன்படுத்திக்கொள்ள இதுவே சரியான தருணம். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அவரை பிளேயிங் லெவனில் கொண்டு வந்தனர். அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். வீரர் ஒருவரின் தற்போதைய ஃபார்மை நான் எப்போதும் நம்புவேன்.

வருண் சக்கரவர்த்தி சிறந்த ஃபார்மில் இருக்கிறார். அவரது உடல்மொழி மற்றும் தன்னம்பிக்கை அபாரமாக உள்ளது. அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் அவரது பந்துவீச்சுக்கு எதிராக அதிகம் விளையாடியது கிடையாது.

நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய அதே பிளேயிங் லெவனுடன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி களமிறங்க வேண்டும் என நினைக்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com