கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்க்யா ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
அஜிங்க்யா ரஹானே கேப்டன்
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடவுள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்க்யா ரஹானேவை அந்த அணி நிர்வாகம் நியமித்துள்ளது.
கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக வழிநடத்தி வந்தார். அவர் மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டு, அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், அஜிங்க்யா ரஹானே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: 300-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் விராட் கோலி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் நீண்ட காலம் பயணித்து வரும் வெங்கடேஷ் ஐயர், அந்த அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து ரஹானே பேசியதாவது: ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக வலம் வரும் கொல்கத்தா அணியை கேப்டனாக வழிநடத்த கிடைத்திருக்கும் வாய்ப்பை கௌரவமாக கருதுகிறேன். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சமபலத்துடன் இருப்பதாக நினைக்கிறேன். நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள அனைவருடனும் இணைந்து பயணிக்க ஆவலாக இருக்கிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கேப்டன் பொறுப்பிலிருந்து விலக ஒருபோதும் நினைக்கவில்லை: அஜிங்க்யா ரஹானே

ஐபிஎல் கடைசி லீக் போட்டி: கே.எல்.ராகுல் அரைசதம்; ஆறுதல் வெற்றி யாருக்கு?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சு; பிளே ஆஃப் செல்வதற்கு வாய்ப்பிருக்கிறதா?







