
இந்திய அணியின் விராட் கோலி அவரது 300-வது ஒருநாள் போட்டியில் விளையாடுகிறார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இன்றையப் போட்டி விராட் கோலி இந்திய அணிக்காக விளையாடும் 300-வது ஒருநாள் போட்டியாகும்.
இதையும் படிக்க: ரஞ்சி கோப்பை: விதர்பா 3-வது முறையாக சாம்பியன்!
இந்திய அணிக்காக விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் கடந்த 2008 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். அவர் ஒருநாள் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களைக் கடந்து விளையாடி வருகிறார். மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் 51 சதங்கள் விளாசியுள்ள அவர், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.
இந்திய அணியை விராட் கோலி 95 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தியுள்ளார். அவரது தலைமையிலான இந்திய அணி 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இரண்டாமிடம் பெற்றது. 2019 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதி வரை முன்னேறியது.
7-வது இந்திய வீரர்
இந்திய அணிக்காக 300 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் 7-வது வீரர் என்ற பெருமை விராட் கோலியைச் சேரும். ஒட்டுமொத்தமாக பார்க்கையில் சர்வதேச கிரிக்கெட்டில் 300-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் 22-வது வீரர் என்ற பெருமை அவரைச் சேரும்.
இதையும் படிக்க: ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் சாதனை!
இந்திய அணிக்காக 300-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் விராட் கோலிக்கு இந்திய வீரர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
300-வது போட்டியில் விராட் கோலி 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.