
ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணிக்காக அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கராச்சியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.
இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா தரப்பில் மார்கோ ஜேன்சன் மற்றும் வியான் முல்டர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். கேசவ் மகாராஜ் 2 விக்கெட்டுகளையும், லுங்கி இங்கிடி மற்றும் ககிசோ ரபாடா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
100 விக்கெட்டுகள்
இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லரின் விக்கெட்டினைக் கைப்பற்றிய லுங்கி இங்கிடி, தென்னாப்பிரிக்க அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்தார்.
இதுவரை தென்னாப்பிரிக்க அணிக்காக 66 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள லுங்கி இங்கிடி 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதில் ஒரு ஐந்து விக்கெட்டும் அடங்கும். 58 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதே அவரது சிறந்த பந்துவீச்சு என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.