
பிப்ரவரி மாத ஐசிசி விருதுக்கு தாய்லாந்து இளம் வீராங்கனை பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சர்வதேசப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஒவ்வொரு வீரர் மற்றும் வீராங்கனைக்கு ஒவ்வொரு மாதமும் ஐசிசி விருது வழங்கப்படுகிறது. இந்த நிலையில், பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான ஐசிசி விருதுக்குரிய பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
அலானா கிங் (ஆஸ்திரேலியா)
இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஆஷஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகி விருது வென்ற ஆஸ்திரேலியாவின் அலானா கிங் ஐசிசி சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
மெல்பர்னில் நடைபெற்ற ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து 9 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதுமட்டுமின்றி 3 கேட்ச்களையும் பிடித்து அசத்தினார்.
இதையும் படிக்க: இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா செய்ய வேண்டியதென்ன? முன்னாள் கேப்டன் பதில்!
அனபெல் சதர்லேண்ட் (ஆஸ்திரேலியா)
இங்கிலாந்துக்கு எதிராக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய அனபெல் சதர்லேண்ட் 21 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 163 ரன்கள் விளாசி ஆட்டநாயகி விருதையும் வென்றார்.
ஆல்-ரவுண்டரான அனபெல் விக்கெட்டை வீழ்த்தாவிட்டாலும், பேட்டிங்கில் சிறந்த பங்களிப்பை அளித்தார்.
திபாட்சா புத்தாவோங் (தாய்லாந்து)
நேபாளத்தில் முத்தரப்பு ஒருநாள் தொடரை வென்றதன் மூலம் 20 வயதே ஆன தாய்லாந்து வீராங்கனை திபாட்சா புத்தாவோங் மீண்டும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய திபாட்சா புத்தாவோங் 3 விக்கெட்டுகள் வீதம் 4 போட்டிகளில் மொத்தமாக 14 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அதில் நேபாளத்துக்கு எதிராக 4/10 விக்கெட்டுகள் வீழ்த்தியதும் அடங்கும். மேலும், பேட்டிங்கில் அவர் இந்தத் தொடரில் 33 ரன்கள் எடுத்திருந்தார்.
இதையும் படிக்க: ஸ்லீவ்லெஸ் ஜெர்ஸிகள் அணிய தடை! ஐபிஎல் வீரர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.