பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

ஸ்லீவ்லெஸ் ஜெர்ஸிகள் அணிய தடை! ஐபிஎல் வீரர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் என்ன?

ஐபிஎல்லில் வீரர்கள் புதிய கட்டுப்பாடுகள் என்ன என்பதைப் பற்றி...

News image

ஸ்லீவ்லெஸ் ஜெர்ஸிகளுடன் விராட் கோலி, தோனி, பாண்டியா..

Updated On :7 மார்ச் 2025, 7:33 am

ஐபிஎல்லில் வீரர்களுக்கு பிசிசிஐ புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் உள்பட 10 அணிகள் மோதும் 18-வது ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன.

ஐபிஎல் போட்டிகளுக்குப் பின்னர் நடைபெறும் விருது வழங்கும் விழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு ஃபிலாப்பீஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ் எனப்படும் கையில்லாத ஆடைகளை வீரர்கள் அணிவதற்கு பிசிசிஐ தடைவிதித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்திய அணி மிகப் பெரிய தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து இந்திய வீரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பயிற்சி நேரமாக இருந்தாலும் ட்ரெஸ்ஸிங் அறையில் வீரர்களின் உறவினர்களுக்கு கட்டுப்பாடு, வீரர்களுக்கான பேருந்தில் மேலாளர்களுக்கு தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பல நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் ஐபிஎல் தொடரில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கமுடியாது என்று நினைத்தாலும், உலகின் பல இடங்களில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் இந்த விதிகள் பயன்பாட்டில் இருக்கின்றன.

பயிற்சிக்கான கட்டுப்பாடுகள் என்ன?

  • ரேஞ்ச் ஹிட்டிங் என்னும் நேரடியாக சிக்ஸர் அடிக்க 2 ஆடுகளங்களும் பக்கவாட்டில் ஒரு ஆடுகளமும் வழங்கப்படும்.

  • திறந்தவெளி ஆடுகளத்தில் விளையாட அனுமதியில்லை.

  • முன்கூட்டியே ஆடுகளத்தில் பயிற்சியை முடித்துவிட்டால் மற்ற அணியினர் அதே ஆடுகளத்தில் விளையாட அனுமதிக்கப்படமாட்டார்கள்.

  • போட்டி நாளில் பயிற்சி எடுக்க அனுமதியில்லை.

  • பிரதான போட்டி நடக்கும் நாளில் உடல் தகுதி சோதனை எதுவும் நடத்தக்கூடாது.

  • பயிற்சிக்காக வீரர்கள் வரும்போது அணி பேருந்தைப் பயன்படுத்தலாம். அணிகள் இரண்டு பிரிவுகளாக பயணிக்கலாம்.

  • பயிற்சி நாள்களில் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்கள் மட்டுமே டிரஸ்ஸிங் ரூமிலும் விளையாட்டு மைதானத்திலும் அனுமதிக்கப்படுவார்கள்.

  • வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் வேறு வாகனத்தில் பயணிக்கலாம், அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள அறையில் இருந்து அணி பயிற்சியைப் பார்க்கலாம்.

போட்டி நாள்

  • அங்கீகரிக்கப்பட்ட வீரர்களின் உதவியாளர்கள், அதிகாரபூர்வ ஆவணத்தை கொண்டுவருவது அவசியமாகும். ஒருவேளை கொண்டுவராத பட்சத்தில் முதல் முறை எச்சரித்து அனுப்பப்படும். இரண்டாவது முறை இதுபோன்று செய்தால் அணிக்கு அபராதம் விதிக்கப்படும்.

  • வீரர்களுக்கு பயிற்சி வலைகள் வழங்கப்பட்டிருந்தாலும், மைதானத்தில் இருக்கும் எல்ஈடி பதாகைகளில் அடித்து சேதப்படுத்தக்கூடாது. அதை வீரர்கள் கடைபிடிக்க வேண்டும்.

  • எல்ஈடி பதாகைகளுக்கு முன்னாள் வீரர்கள் மற்றும் போட்டி ஊழியர்கள் உட்காரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

  • அதிக ரன் மற்றும் விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் ஆரஞ்சு மற்றும் உதா நிற தொப்பிகளை கட்டாயம் அணிய வேண்டும்.

  • போட்டிக்குப் பின் விருது வழங்கும் நிகழ்ச்சியில், ஃப்ளாப்பி மற்றும் ஸ்லீவ்லெஸ் ஜெர்ஸி அனுமதிக்கப்படாது. அவ்வாறு அணிந்திருந்தால் முதல் முறை எச்சரிக்கை செய்யப்பட்டு இரண்டாவது முறை அபராதம் விதிக்கப்படும்.

  • கடந்த ஐபிஎல் சீசனைப் போலவே, போட்டி நாள்களில், அணி மருத்துவர் உள்பட 12 அங்கீகாரம் பெற்ற ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

ஜெர்ஸி நம்பர்

  • ஜெர்ஸி நம்பர் மற்றும் கிரிக்கெட் உபகரணங்களை மாற்ற நினைத்தால், 24 மணி நேரத்துக்கு முன்னதாக கூறவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.