நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து இரண்டு மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் விலகியுள்ளனர்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் முன்னேறிவிட்ட நிலையில், நான்காவது இடத்துக்கு ஐந்து அணிகளுக்குள் போட்டி நிலவுகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியிலிருந்து லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஏற்கெனவே வெளியேறிவிட்டன.
இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்களான குயிண்டன் டி காக் மற்றும் ராஜ் அங்கத் பவா காயம் காரணமாக விலகியுள்ளனர்.
சன்ரைசர்ஸுக்கு எதிராக மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற போட்டியின்போது, டி காக்குக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதே போன்று, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது, மற்றொரு மும்பை வீரரான ராஜ் அங்கத் பவாவுக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, இந்த இரண்டு வீரர்களும் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகியுள்ளனர்.
இந்த சீசனில் டி காக் மற்றும் ராஜ் அங்கத் பவா இருவரும் தலா மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி அதன் கடைசி இரண்டு லீக் ஆட்டங்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிராக விளையாடவுள்ளது.
Summary
Two Mumbai Indians players have withdrawn from the remaining matches of the ongoing IPL season.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் இறுதிப்போட்டி: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு!

நடப்பு ஐபிஎல் சீசன் பாதியிலேயே மும்பை அணியிலிருந்து விலக முடிவெடுத்த ஹார்திக் பாண்டியா?

ஹார்திக் தலைமையில் மட்டும் சொதப்பும் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்..! என்ன காரணம்?

4ஆவது முறையாக தொடக்க வீரர்களில் மாற்றம் செய்த மும்பை இந்தியன்ஸ்..! 2012 சீசன் திரும்புகிறதா?
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |




