விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தில் என்னென்ன 'கட்'?தாய்நாட்டிற்காக உயிரையே அர்ப்பணித்தவர் அழகு முத்துக்கோன்: முதல்வர் விஜய்சிறுமி உள்பட 6 பேர் கொலை! போக்சோ வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் வெறிச்செயல்!நேற்று தங்கம் வாங்கியிருந்தால் வருத்தப்படுவீர்கள்! இன்றைய விலை நிலவரம் (ஜூலை 11) அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

பிரையன் லாராவின் மோசமான சாதனையை சமன்செய்த ரோஹித் சர்மா!

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாராவின் மோசமான சாதனையை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார்.

News image

படம் | AP

Updated On :9 மார்ச் 2025, 5:12 pm IST

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாராவின் மோசமான சாதனையை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பேட்டிங்கைத் தேர்வு செய்ய, அந்த அணி முதலில் விளையாடி வருகிறது.

மோசமான சாதனை சமன்

இன்றையப் போட்டியில் டாஸில் வெற்றி பெறாததன் மூலம், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் தோற்பதில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாராவின் மோசமான சாதனையை சமன் செய்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் கேப்டன் ரோஹித் சர்மா தொடர்ச்சியாக 12-வது முறையாக டாஸ் தோற்றுள்ளார். இந்திய அணிக்கு இது தொடர்ச்சியாக ஏற்படும் 15-வது டாஸ் தோல்வியாகும். டாஸில் தோற்கும் ரோஹித் சர்மாவின் பயணம் கடந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலிருந்து தொடங்கியது. அதன் பின், தொடர்ச்சியாக 11 போட்டிகளில் ரோஹித் சர்மா டாஸ் வெல்லவில்லை. இன்றையப் போட்டியையும் சேர்த்து அவர் 12 போட்டிகளில் தொடர்ச்சியாக டாஸ் வெல்லவில்லை.

கடந்த 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் பிரையன் லாரா தொடர்ச்சியாக 12 ஒருநாள் போட்டிகளில் டாஸில் தோற்றார். தற்போது அந்த மோசமான சாதனையை ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.