
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இரு முறை சாம்பியனான (2013, 2022) இந்திய அணி 3-ஆவது கோப்பைக்கு இலக்கு வைக்கிறது. நியூசிலாந்தும் ஒரு முறை (2000) சாம்பியன்ஸ் டிராபி வென்றிருக்கிறது.
அதுவும் 25 ஆண்டுகளுக்கு முன் கென்யாவில் நடைபெற்ற 2-ஆவது சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்தியாவை வென்று கோப்பையைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து: வில் யங், ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், நாதன் ஸ்மித், கைல் ஜேமிசன், வில்லியம் ரூர்கே.
இந்தியா: ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஷ் ஐயர், அக்ஷர் படேல், கே.எல்.ராகுல், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி.
ரோஹித் சர்மா வெற்றி பெறுவாரா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.