சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் போட்டி குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரர்!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பேசியுள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்படம் | ஐபிஎல்
Published on
Updated on
1 min read

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசியுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அதன் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி வருகிற மார்ச் 23 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

சிஸ்கேவுக்கு பாராட்டு

மார்ச் 23 ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் மிகவும் சிறந்த அணி எனவும், இந்த ஐபிஎல் தொடரில் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பாக செயல்படுவார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி மிகப் பெரிய போட்டியாக இருக்கப் போகிறது. இந்த ஐபிஎல் சீசனும் சிறப்பான ஐபிஎல் சீசனாக அமையப் போகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com