முதல் போட்டியைத் தவறவிடும் ஹார்திக்... மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக சூர்யகுமார் யாதவ்!

முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை தலைமை தாங்கும் சூர்யகுமார் யாதவ்..
ஹார்திக் பாண்டியாவுடன் சூர்யகுமார் யாதவ்..
ஹார்திக் பாண்டியாவுடன் சூர்யகுமார் யாதவ்..
Published on
Updated on
1 min read

முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை சூர்யகுமார் யாதவ் தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கேவுக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் செயல்படுவார் என்று தற்போதைய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

கடந்த தொடரில் மெதுவாக பந்துவீசியதற்காக ஹார்திக் பாண்டியாவுக்கு ஒரு போட்டியில் விளையாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டது. இதனால், அவர் சென்னைக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18-வது ஐபிஎல் தொடரில் முதலாவது போட்டி வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதவிருக்கின்றன. சென்னையில் மார்ச் 23-ல் நடைபெறும் இரண்டாவது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க: சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்த சிஎஸ்கே - மும்பை போட்டி டிக்கெட்டுகள்! ரசிகர்கள் ஏமாற்றம்

இருப்பினும், முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இல்லாதது மும்பை அணிக்கு பின்னடைவாக கருதப்பட்டாலும், கேப்டன் ஹார்திக் பாண்டியா முதல் போட்டியில் மட்டும் விளையாடாதது மேலும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இதுபற்றி ஹார்திக் பாண்டியா பேசுகையில், “எங்கள் அணியில் இந்திய அணியின் ஒருநாள், டெஸ்ட், டி20 கேப்டன் இருப்பது எங்களுக்கு சாதகமானது. மேலும், சூர்யகுமார் யாதவுக்கு அணியை வழிநடத்துவது என்பது புதியது கிடையாது. அவர் தேசிய அணியை நன்றாக வழிநடத்தி வருகிறார்” எனத் தெரிவித்தார்.

கடந்த சீசன் மும்பை அணிக்கு மிகவும் மோசமாகவே அமைந்தது. ஹார்திக் பாண்டியா தலைமையில் அந்த அணி 14 போட்டிகளில் விளையாடி வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ராமநவமி விழா: பாதுகாப்பு காரணங்களால் கொல்கத்தா - லக்னௌ போட்டியில் மாற்றமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com