ராமநவமி விழா: பாதுகாப்பு காரணங்களால் கொல்கத்தா - லக்னௌ போட்டியில் மாற்றமா?

கொல்கத்தா - லக்னௌ போட்டியில் மாற்றமா என்பதை பற்றி..
ஐபிஎல் கோப்பை
ஐபிஎல் கோப்பை(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

ராமநவமி விழா கொண்டாட்டங்களுக்காக கொல்கத்தா - லக்னௌ இடையேயான போட்டியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

18-வது ஐபிஎல் தொடரில் முதலாவது போட்டி வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதவிருக்கின்றன.

இந்த நிலையில், ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் ராம நவமி கொண்டாட்டங்கள் காரணமாக, ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் போட்டிக்கான மைதானம் மாற்றி அமைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிக்க: சிஎஸ்கே - மும்பை போட்டி: இன்று டிக்கெட் விற்பனை! கிரிக்கெட் ரசிகர்கள் கவனிக்க..!

மேற்குவங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி ராம நவமியன்று மேற்கு வங்கம் முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட ஊர்வலங்கள் நடைபெறும் என்று அறிவித்திருந்தார். இதனால், பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

முக்கிய காவல்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் சினேகாஷிஷ் கங்குலி கூறுகையில், “போட்டிக்கான பாதுகாப்புக்கு இன்னும் அனுமதியளிக்கவில்லை. மேலும், 65,000-க்கும் அதிகமான ரசிகர்கள் கூடுவதால், அவர்களுக்கு பாதுகாப்பளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாங்கள் பிசிசிஐ-க்கு தகவல் தெரிவித்துள்ளோம். இறுதி முடிவை எடுக்க இன்னும் நேரம் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த சீசனில், ராம நவமியன்று நடைபெற்ற கொல்கத்தா - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியும் பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்றியமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஐபிஎல்லுக்குப் பின் வாழ்க்கையில் முக்கிய பாடங்களை கற்றுக் கொண்டேன்! -ஹார்திக் பாண்டியா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com