
சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் போட்டிக்கான டிக்கெட் இன்று விற்பனை செய்யப்படவுள்ளது..
சென்னை சேப்பாக்கத்தில் மார்ச் 23ம் தேதியன்று நடைபெறும் சென்னை, மும்பை அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது.
18-வது ஐபிஎல் தொடரில் முதலாவது போட்டி வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதவிருக்கின்றன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் தங்களது அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் மார்ச் 23-ல் நடைபெறும் இரண்டாவது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.இந்த நிலையில், இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனையும் தொடங்கியுள்ளது.
இதையும் படிக்க: வெளிநாட்டுத் தொடர்களில் வீரர்களுடன் குடும்பங்கள் பயணிப்பது நல்லது: கபில் தேவ்
இன்று காலை 10.15 மணி முதல் ஐபிஎல் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,700 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகளை www.chennaisuperkings.com என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை அணியின் மகேந்திர சிங் தோனி ஓய்வுபெறுவார் என்ற மனநிலை மக்களிடையே நிலவுவதால், இந்தப் போட்டிக்கான டிக்கெட் சிறிது நேரத்திலேயே விற்றுத்தீர்ந்து விடும் எனக் கூறப்படுகிறது. மேலும், சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் இடையே கடுமையான போட்டி நிலவுவதால், டிக்கெட் விற்பனை மேலும் சூடுபிடித்துள்ளது.
சென்னை மெட்ரோவில் சிஎஸ்கே கிரிக்கெட் டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டிக்கெட் விலைகள் மற்றும் ஸ்டாண்டுகள்
ரூ.1,700 – சி/டி/இ லோயர்
ரூ.2,500 –ஐ/ஜே/கெ அப்பர்
ரூ.3,500 – சி/டி/இ அப்பர்
ரூ.4,000 – ஐ/ஜே/கெ லோயர்
ரூ.7,500 – கே.எம்.கே டெரஸ்
இதையும் படிக்க: விராட் கோலி ஸ்டிரைக் ரேட்டை அதிகப்படுத்த தேவையில்லை: ஏபி டி வில்லியர்ஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.