விராட் கோலி ஸ்டிரைக் ரேட்டை அதிகப்படுத்த தேவையில்லை: ஏபி டி வில்லியர்ஸ்

விராட் கோலி அவரது ஸ்டிரைக் ரேட்டை அதிகப்படுத்த தேவையிருக்காது என முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி
விராட் கோலிபடம் | ஐபிஎல்
Published on
Updated on
2 min read

விராட் கோலி அவரது ஸ்டிரைக் ரேட்டை அதிகப்படுத்த தேவையிருக்காது என முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

ஏபி டி வில்லியர்ஸ் கூறுவதென்ன?

இன்னும் சில தினங்களில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், விராட் கோலி அவரது ஸ்டிரைக் ரேட்டினை அதிகப்படுத்த தேவையில்லை எனவும், அவர் ஸ்மார்ட்டாக விளையாட வேண்டும் எனவும் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஏபி டி வில்லியர்ஸ் (கோப்புப் படம்)
ஏபி டி வில்லியர்ஸ் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலி கிரிக்கெட்டினை அனுபவித்து விளையாடுவதாக நினைக்கிறேன். அவர் பில் சால்ட்டுடன் விளையாடும்போது, அவரது ஸ்டிரைக் ரேட்டினை அதிகப்படுத்த தேவையிருக்காது என நினைக்கிறேன். நாம் பார்த்ததிலேயே அதிரடியாக விளையாடக் கூடிய ஆட்டக்காரர்களில் ஒருவர் பில் சால்ட். விராட் கோலியின் மீதான அழுத்தத்தை பில் சால்ட் எடுத்துவிடுவார் என நினைக்கிறேன்.

பல ஆண்டுகளாக விராட் கோலி கிரிக்கெட்டில் செய்து வருவதை தொடர்ந்தாலே போதுமானதாக இருக்கும். அவர் ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்து புத்திசாலித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் போதும். அவருக்கு எப்போது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும், எப்போது அதிரடியாக விளையாட வேண்டும் என்பது தெரியும்.

கடந்த சில சீசன்களாக விராட் கோலியின் பேட்டிங்கின் மீது தேவையற்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. வெளியிலிருந்து வரும் விமர்சனங்கள் அவரது ஆட்டத்தில் சிறிதளவாவது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அவரும் மனிதர்தான். அவரது மனதில் சில சந்தேகங்கள் எழுந்திருக்கலாம். ஆனால், விராட் கோலி எப்போதும் அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளார். முக்கியமான தருணங்களில் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுத் தந்துள்ளார் என்றார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக தொடர்ச்சியாக அதிக ரன்கள் குவித்து வரும் போதிலும், கடந்த இரண்டு சீசன்களாக விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் மிகப் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com