பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

கொல்கத்தா நைட் ரைடர்ஸில் இணைந்த பிளெஸ்ஸிங் முஸராபானி!

ஜிம்பாப்வே அணியின் வேகப் பந்துவீச்சாளர் பிளெஸ்ஸிங் முஸராபானி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்துள்ளார்.

News image

பிளெஸ்ஸிங் முஸராபானி - படம் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (எக்ஸ்)

Updated On :13 மார்ச் 2026, 7:56 pm IST

ஜிம்பாப்வே அணியின் வேகப் பந்துவீச்சாளர் பிளெஸ்ஸிங் முஸராபானி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் வருகிற மார்ச் 28 முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், ஜிம்பாப்வே அணியின் வேகப் பந்துவீச்சாளர் பிளெஸ்ஸிங் முஸராபானி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் இணைந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: எதிர்வரும் ஐபிஎல் சீசனுக்காக ஜிம்பாப்வே அணியின் வேகப் பந்துவீச்சாளர் பிளெஸ்ஸிங் முஸராபானியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக அளவிலான சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர் பிளெஸ்ஸிங் முஸராபானி. அவர் இதுவரை 80-க்கும் அதிகமான சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 90-க்கும் அதிகமான விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் முஸ்தபிசூர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டதையடுத்து, பிளெஸ்ஸிங் முஸராபானி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்துள்ளார். அவர் கொல்கத்தா அணியுடன் வருகிற மார்ச் 17 ஆம் தேதி இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் நிறைவடைந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முஸராபானி, அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர்கள் வரிசையில் மூன்றாமிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Zimbabwean fast bowler Blessing Muzaffarani has joined Kolkata Knight Riders for the upcoming IPL season.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.