
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 73 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
டி20 தொடரை 4-1 என வென்ற நியூசிலாந்து ஒருநாள் தொடரையும் வெல்லும் முனைப்பில் இருகிறது.
முதலில் பேட்டிங் ஆடிய நியூசி. 344/9 ரன்கள் எடுத்தது. இதில் சாப்மன் சதமடித்து அசத்தினார்.
111 பந்துகளில் 132 ரன்கள் எடுத்தார். இதில் 13 பவுன்டரிகள், 6 சிக்ஸர்கள் அடங்கும்.
அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 44.1 ஓவர்களில் 271க்கு ஆல் அவுட்டானது.
பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக பாபர் அசாம் 78 ரன்கள் அடிக்க, நியூசி. சார்பி நாதன் ஸ்மித் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
சதமடித்த மார்க் சாப்மன் ஆட்ட நாயகன் விருதுபெற்றார். 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் 1-0 என நியூசி, முன்னிலை பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.