
டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது ரோஹித் சர்மாவின் தனிப்பட்ட முடிவு என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (மே 7) அறிவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், ரோஹித் சர்மாவின் ஓய்வு அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிசிசிஐக்கு எந்த தொடர்பும் இல்லை
டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென ரோஹித் சர்மா அறிவித்த நிலையில், ரோஹித் சர்மாவின் ஓய்வு முடிவு அவரது தனிப்பட்ட முடிவு எனவும், பிசிசிஐ தரப்பிலிருந்து எந்த ஒரு அழுத்தமும் அவருக்கு இல்லை எனவும் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: எந்த ஒரு வீரரையும் ஓய்வு பெற வேண்டும் என பிசிசிஐ தரப்பில் அழுத்தம் கொடுக்கப்படாது. வீரர்களின் ஓய்வு குறித்து பிசிசிஐ எதுவும் தெரிவிப்பதும் கிடையாது. ரோஹித் சர்மா மிகவும் சிறந்த பேட்ஸ்மேன். ரோஹித் சர்மா கிரிக்கெட்டிலிருந்து முழுவதுமாக ஓய்வு பெறவில்லை என்பது நல்ல விஷயம். அதனால், அவரது அனுபவத்தையும், திறமையையும் நாங்கள் கண்டிப்பாக பயன்படுத்திக் கொள்வோம் என்றார்.
38 வயதாகும் ரோஹித் சர்மா இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4301 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.