ரோஹித் சர்மா போன்று இந்திய அணிக்காக விளையாடியவர்கள் சிலரே: கபில் தேவ்

ரோஹித் சர்மாவைப் போன்று வெகு சிலரே இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடியுள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா (கோப்புப் படம்)
ரோஹித் சர்மா (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

ரோஹித் சர்மாவைப் போன்று வெகு சிலரே இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடியுள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (மே 7) அறிவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக இந்திய அணியை வழிநடத்துவாரா அல்லது ஒரு வீரராக மட்டும் விளையாடுவாரா என பேசப்பட்டு வந்த நிலையில், ரோஹித் சர்மாவின் அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கபில் தேவ் கூறியதென்ன?

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் சர்மா அறிவித்த நிலையில், இந்திய அணிக்காக ரோஹித் சர்மாவைப் போன்று வெகு சிலரே கிரிக்கெட் விளையாடியுள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணிக்காக ரோஹித் சர்மா மிகவும் சிறப்பாக விளையாடியுள்ளார். இத்தனை ஆண்டுகளாக இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடியது மட்டுமின்றி, அணியை கேப்டனாகவும் சிறப்பாக வழிநடத்தினார். அவர் இந்திய அணிக்காக விளையாடிய விதம் மிகவும் சிறப்பானது. ஏனெனில், வெகு சிலரே அவரைப் போன்று இந்திய அணிக்காக விளையாடியுள்ளனர்.

கபில் தேவ் (கோப்புப் படம்)
கபில் தேவ் (கோப்புப் படம்)

ரோஹித் சர்மாவின் சிறப்பான கிரிக்கெட் பயணத்துக்கு எனது வாழ்த்துகள். டி20 போட்டிகளிலிருந்து ஏற்கனவே ஓய்வு முடிவை அறிவித்துவிட்ட நிலையில், ரோஹித் சர்மாவை நம்மால் இனி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே காண முடியும் என்றார்.

38 வயதாகும் ரோஹித் சர்மா இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4301 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 12 சதங்கள் மற்றும் 18 அரைசதங்கள் அடங்கும்.

ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்துள்ள நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியை கேப்டனாக யார் வழிநடத்தப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com