

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (மே 13) அறிவித்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி லார்ட்ஸ் திடலில் வருகிற ஜூன் 11 தொடங்கி ஜூன் 15 வரை நடைபெறவுள்ளது.
தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு
அடுத்த மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறவுள்ள நிலையில், அந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (மே 13) அறிவித்துள்ளது.
அணியை டெம்பா பவுமா கேப்டனாக வழிநடத்துகிறார். கடந்த அக்டோபருக்குப் பிறகு லுங்கி இங்கிடி டெஸ்ட் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தில் கிரிக்கெட் விளையாட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு ககிசோ ரபாடா அணியில் இடம்பெறுவாரா சந்தேகம் எழுந்த நிலையில், அவரும் அணியில் இடம்பெற்றுள்ளார்.
தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட செனுரான் முத்துசாமி தென்னாப்பிரிக்க அணியில் இடம்பெற்றுள்ளார். அவர் நாகப்பட்டினத்தை பூர்விகமாகக் கொண்டவர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணி விவரம்
டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹம், கார்பின் போஸ்ச், டோனி டி ஸார்ஸி, மார்கோ யான்சென், கேசவ் மகாராஜ், அய்டன் மார்க்ரம், வியான் முல்டர், செனுரான் முத்துசாமி, லுங்கி இங்கிடி, டேன் பீட்டர்சன், ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டான், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெரைன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.