இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி; ஆயுஷ் மாத்ரே கேப்டன்!

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் 19 வயதுக்குட்படோருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (மே 22) அறிவித்துள்ளது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி; ஆயுஷ் மாத்ரே கேப்டன்!
படம் | பிசிசிஐ
Published on
Updated on
1 min read

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் 19 வயதுக்குட்படோருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (மே 22) அறிவித்துள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடர் வருகிற ஜூன் 24 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அணியின் கேப்டனாக சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே நியமிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் 14 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷியும் அணியில் இடம்பெற்றுள்ளார். ஐபிஎல் போட்டியில் தனது அதிரடியான பேட்டிங் மூலம் கவனம் ஈர்த்ததால், சூர்யவன்ஷி அணியில் இடம்பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஆயுஷ் மாத்ரே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக சிறப்பாக விளையாடி வருகிறார். ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு காயம் ஏற்பட்டதால், அணியில் இடம்பெற்ற ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதுவரை 9 முதல் தர மற்றும் 7 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடியுள்ள மாத்ரே, 962 ரன்கள் குவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி விவரம்

ஆயுஷ் மாத்ரே (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா, மௌல்யராஜ்சிங் சௌதா, ராகுல் குமார், அபிக்யான் குண்டு (துணைக் கேப்டன்), ஹர்வன்ஷ் சிங், ஆர்.எஸ்.அம்பிரிஷ், கனிஷ்க் சௌகான், கிலன் படேல், ஹெனில் படேல், யுதஜித் குஹா, பிரணவ் ராகவேந்திரா, முகமது எனான், ஆதித்யா ராணா, அன்மோன்ஜீத் சிங்.

கூடுதல் வீரர்கள்

நமன் புஷ்பக், தீபேஷ், வேதாந்த் திரிவேதி, விகால்ப் திவாரி, அலன்கிரித் ரப்போல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com