

தோல்வியின் வலியை இந்திய அணி உணர்ந்துள்ளதாகவும், வெற்றியை எதிர்நோக்கி களமிறங்குவதாகவும் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தெரிவித்துள்ளார்.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நவி மும்பையில் நாளை (நவம்பர் 2) நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில், உலகக் கோப்பைத் தொடரில் தோல்வியின் வலியை இந்திய அணி உணர்ந்துள்ளதாகவும், நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கவுள்ளதாகவும் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தால் எப்படி இருக்கும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருக்கிறோம். ஆனால், வெற்றி பெற்றால் எப்படி உணர்வோம் என்பதை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். நாளை எங்களுக்கு சிறப்பான நாளாக அமையும் என நம்புகிறோம். நாங்கள் நிறைய கடினமாக உழைத்துள்ளோம். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற வேண்டும் என்றார்.
நடப்பு உலகக் கோப்பை தொடர் உள்பட இந்திய அணி இதுவரை மூன்று முறை உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதற்கு முன்பாக நடைபெற்ற இரண்டு இறுதிப்போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.
கடந்த 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதன் பின், 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து.
முதல் முறையாக கோப்பையை வெல்லும் கனவோடு களமிறங்கும் இந்திய அணி, கோப்பையை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.