ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

ஆசியக் கோப்பையில் மோதிக்கொண்ட விவகாரத்தில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் உள்பட 4 பேருக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளதைப் பற்றி...
சூர்யா - ரௌஃப் - ஃபர்கான் - பும்ரா
சூர்யா - ரௌஃப் - ஃபர்கான் - பும்ரா
Published on
Updated on
2 min read

ஆசியக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியின் போது இரு அணியிலும் வீரர்கள் மோதிக்கொண்ட விவகாரத்தில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா உள்பட 4 பேருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் மோதல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்தத் தொடரில் செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியின் போது இருநாடுகளுக்கும் இடையேயான மோதல்கள், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்ட காரணங்களால், இந்​திய அணியின் கேப்டன் சூர்​யகு​மார் யாதவ், பாகிஸ்​தான் கேப்​டன் சல்மான் அலி அகா​ இருவரும் போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பு, டாஸ் உள்ளிட்டவற்றிலும் லீக் சுற்று, சூப்பர் 4 சுற்று போட்டியின் முடிவிலும் கைகுலுக்​க​வில்​லை.

மேலும் போட்டி முடிவடைந்த பின்​னரும் இரு அணி வீரர்​களும் கைக்குலுக்​கும் சம்​பிர​தா​யங்​களும் நிகழ​வில்​லை. இது ஒரு​புறம் இருக்க இந்த ஆட்​டத்​தின் போது பாகிஸ்​தான் வீரர்​கள் நடந்து கொண்ட விதம் மிகுந்த சர்ச்​சைக்​குள்​ளானது.

போட்​டி​யின் போது பாகிஸ்​தான் வீரர்​கள் சர்ச்​சைக்​குரிய அரசியல் நோக்​கம் கொண்ட சைகைகளைச் செய்​தனர். பாகிஸ்தான் வீரர் ஷாஹிப்ஸாதா ஃபர்ஹான் அரைசதம் அடித்ததும் தனது கிரிக்கெட் பேட்​டை துப்​பாக்கி போன்று வைத்து ரசிகர்​களை நோக்கி சுடு​வதை போன்று சைகை காட்டினார்.

இதுதொடர்​பான படங்​கள் சமூக வலை​தளங்​களில் அதி​கம் பகிரப்​பட்டு விமர்​சிக்​கப்​பட்​டன. ஷாஹிப்ஸாதா ஃபர்ஹானின் இந்த செயல் விளை​யாட்டின் மாண்​பை​ சீர்​குலைக்​கும் வகை​யில் இருந்​த​தாக இந்திய ரசிகர்​கள் குற்​றம் சாட்​டியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்​திய அணி பேட்​டிங் செய்த போது பாகிஸ்​தான் பந்து வீச்​சாள​ரான ஷாகீன் ஷா அப்​ரிடி, ஷுப்​மன் கில்​லை​யும், ஹாரிஸ் ரௌஃப் அபிஷேக் சர்​மாவை​யும் வம்​புக்கு இழுத்​தனர். களநடு​வர் உடனடி​யாக தலை​யிட்டு இவர்​களை விலக்​கி​விட்​டார்.

தொடர்ந்து ஹாரிஸ் ரௌஃப் எல்​லைக்​கோட்​டுக்கு அருகே ஃபீல்டிங் செய்​த​போது 0-6 என்ற சைகையையும், விமானம் ஒன்று மேலேழும்பி பின்னர் கீழே விழுந்து வெடித்துச் சிதறுவது போலவும் சைகை காட்டினார்.

கடந்த மே மாதம் நடந்த ‘ஆபரேஷன் சிந்​தூர்’ நடவடிக்கையின் ராணுவ மோதலில் பாகிஸ்​தான் ராணுவம், 6 இந்​திய போர் விமானங்​களைச் சுட்டு வீழ்த்​தி​ய​தாகத் தெரிவிப்பது போலவும் இருந்ததாக இந்திய ரசிகர் கொதித்தெழுந்தனர்.

அபராதம்

அதைத் தொடர்ந்து இறுதிப்போட்டியில் ஹாரிஸ் ரௌஃப் விக்கெட்டை வீழ்த்திய ஜஸ்ப்ரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ரசிகர்களை நோக்கி போர் விமானம் மோதுவது போலவும் செய்தனர். இதனால், ஆசியக் கோப்பை நிர்வாகம் சார்பில் சூர்யகுமார் யாதவ், ஹாரிஸ் ரௌஃப் உள்ளிட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் மோதலில் ஈடுபட்டு, ஐசிசி விதிகளை மீறிய சூர்யகுமார் யாதவ், ஷாஹிப்ஸாதா ஃபர்ஹான், ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில், ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “லீக் சுற்றின் அடிப்படையில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹாரிஸ் ரௌஃப் இருவருக்கும் தலா 30 சதவிகிதம் அபராதமும், 2 தகுதியிழப்புப் புள்ளிகளும், ஷாஹிப்ஸாதா ஃபர்ஹானுக்கு 1 தகுதியிழப்புப் புள்ளியும், இறுதிப் போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு ஒரு தகுதியிழப்பு புள்ளியும், ஹாரிஸ் ரௌஃபுக்கு மீண்டும் 30 சதவிகிதம் அபராதமும், 2 தகுதியிழப்புப் புள்ளிகளும் வழங்கப்பட்டன.

ஹாரிஸ் ரௌஃபுக்கு 4 தகுதியிழப்புப் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளதால் அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் தடைசெய்யப்பட்டுள்ளார்.

சூர்யா - ரௌஃப் - ஃபர்கான் - பும்ரா
உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!
Summary

Haris Rauf Receives Severe ICC Punishment Over Asia Cup Row, Suryakumar Yadav Fined

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com