

ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர், உலகக் கோப்பையை வென்றதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக செவ்வாய்க்கிழமை மாலை தேசிய தலைநகர் தில்லி வந்தடைந்தனர்.
நவி மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டி.ஒய். பாட்டீல் திடலில் நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி முதல்முறையாக கோப்பையை உச்சிமுகர்ந்தது.
இந்திய அணி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ. 51 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கோப்பையை வென்ற இந்திய அணியினருடன் நாளை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துத் தெரிவிக்கிறார். இதற்கான இந்திய அணியின் மும்பையில் இருந்து தில்லி புறப்பட்டனர்.
தலைமைப் பயிற்சியாளர் அமோல் முஜும்தாருடன் சேர்ந்து அணியின் வீரர்களுக்கு மும்பை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவர்களை வழியனுப்ப ஏராளமான ரசிகர்கர் குவிந்தனர்.
இருப்பினும், தில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, ஊடகவியலாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.