

ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஹிமாசலப் பிரதேச வீராங்கனை ரேணுகா சிங் தாக்கூருக்கு ரூ. 1 கோடி பரிசு வழங்கப்படும் என முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு அறிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற மகளிருக்கான உலகக் கோப்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நிறைவடைந்தது. இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய ஆட்டத்தில் இந்திய அணி முதல்முறையாக கோப்பையை உச்சிமுகர்ந்தது.
கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ. 37 கோடி பரிசுத் தொகையாக ஐசிசியும், பிசிசிஐ சார்பில் ரூ. 51 கோரி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஹிமாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த ரேணுகா சிங்கை கௌரவிக்கும் விதமாக ரூ. 1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு அறிவித்துள்ளார். 29 வயதான ரேணுகா சிங் சிம்லா மாவட்டத்தைச் சேர்ந்தவராவார்.
இதேபோன்று மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூரைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் கிராந்தி கவுடுக்கு மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவும் ரூ.1 கோடி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.