இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமிக்கப்பட்டது பற்றி...
தீப்தி சர்மா
தீப்தி சர்மாAP
Published on
Updated on
1 min read

உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாடிய தீப்தி சர்மாவுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் பதவி வழங்கப்படுவதாக உத்தரப் பிரதேச டிஜிபி அறிவித்துள்ளார்.

நவி மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தீப்தி சர்மா, 212 ரன்கள் குவித்து 22 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியா கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

இறுதி ஆட்டத்தில் 58 ரன்கள் விளாசிய தீப்தி சர்மா, 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், தொடர் நாயகி விருதையும் வென்றார்.

இந்த நிலையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் திறமைமிகு வீரர் திட்டத்தின் கீழ், தீப்தி சர்மாவை காவல் துணைக் கண்காணிப்பாளராக நியமித்து கெளரவிப்பதாக அம்மாநில காவல்துறை தலைவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Summary

Indian cricketer Deepti Sharma appointed as DSP

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com