

சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் 50 விக்கெட்டுகளைக் கடந்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் இன்று (நவம்பர் 6) நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் 168 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 119 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 1.2 ஓவர்களில் வெறும் 3 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இன்றையப் போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவர் 50 விக்கெட்டுகளைக் கடந்துள்ளார்.
இந்திய அணிக்காக இதுவரை 56 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள வாஷிங்டன் சுந்தர் 51 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இன்றையப் போட்டியில் 3 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவரது சிறந்த பந்துவீச்சு என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான போட்டியில் ஸ்மிருதி மந்தனா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.