சஞ்சு சாம்சனுக்காக ஜடேஜா, பதிரனாவை ராஜஸ்தானுக்கு அளிக்கும் சிஎஸ்கே?

சஞ்சு சாம்சனுக்காக ஜடேஜா, பதிரனாவை ராஜஸ்தானுக்கு அளிக்கும் சிஎஸ்கே?
சஞ்சு சாம்சனுக்காக ஜடேஜா, பதிரனாவை ராஜஸ்தானுக்கு அளிக்கும் சிஎஸ்கே
சஞ்சு சாம்சனுக்காக ஜடேஜா, பதிரனாவை ராஜஸ்தானுக்கு அளிக்கும் சிஎஸ்கே
Published on
Updated on
1 min read

சஞ்சு சாம்சனை விட்டுக்கொடுக்க ரவீந்திர ஜடேஜா மற்றும் மதீஷா பதிரனாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் 2026 தொடரை முன்னிட்டு அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை நவ. 15 ஆம் தேதிக்குள் உறுதி செய்ய வேண்டும். அதற்கு முன்னதாக, அணிகள் டிரேடிங் முறையில் வீரர்களை மாற்றிக் கொள்ளலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முகமாகவுள்ள மகேந்திர சிங் தோனி, எப்போது வேண்டுமானாலும் தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்ற நிலையில், அவருக்கு மாற்றாக பலம்வாய்ந்த ஒரு வீரரை வாங்குவதற்கு சென்னை அணி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகின்றது.

இந்தாண்டு தோனி விளையாடுவார் என்று உறுதிபடுத்தப்பட்ட தகவல் கிடைத்தாலும், அவர் இம்பேக்ட் பிளேயராகவே விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தோனிக்கு மாற்றாக சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரும் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடக் கூடியவருமான சஞ்சு சாம்சனை சென்னை அணிக்கு கொண்டு வர தீவிரம் காட்டப்பட்டு வருகின்றது.

தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் உள்ள சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் பெறுவதற்கு சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் டெவால்டு பிரேவிஸ் ஆகியோரை ராஜஸ்தான் நிர்வாகம் கேட்டுள்ளது.

இதற்கு சென்னை நிர்வாகம் மறுப்பு தெரிவிக்க, ஜடேஜாவையும், பதிரனாவையும் ராஜஸ்தான் நிர்வாகம் கேட்டுள்ளது.

பதிரனாவை கொடுக்கவும் சென்னை நிர்வாகம் ஒப்புக் கொள்ளாத நிலையில், ஜடேஜாவையும் சாம் கரணையும் கொடுக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சீசனில் சென்னை அணியுடன் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட பிரேவிஸ், தனது அதிரடியால் எதிரணியை மிரட்டினார். பதிரனா பெரிதாக விக்கெட்டுகளைக் கைப்பற்றவில்லை என்றாலும் சென்னை அணியின் எதிர்காலமாக கருதப்படுகிறார்.

இதனிடையே, ஜடேஜாவை விட்டுக்கொடுக்க சென்னை அணி முன்வந்திருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் அவரின் ஆட்டத்தை ரசிகர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

ஆனால், ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை செயலிழக்கச் செய்துள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, ஜடேஜா சென்றுவிட்டால் அவருக்கு மாற்றாக குஜராத் டைட்டன்ஸ் அணியில் உள்ள தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை சென்னை அணிக்கு வாங்கவும் டிரேடிங் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகள் கூட்டம் இன்று அல்லது நாளை நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் இறுதி முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகின்றது.

Summary

CSK to offer Jadeja, Pathirana to Rajasthan for Sanju Samson?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com