

குஜராத் டைட்டன்ஸ் அணியில் உள்ள மேற்கிந்தியத் தீவுகள் ஆல்ரவுண்டரை அந்த அணி டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் விற்றுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆல்ரவுண்டரான ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக கடந்த ஐபிஎல் சீசனில் விளையாடினார். அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியால் ரூ.2.6 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார்.
இந்த நிலையில், ஆல்ரவுண்டர் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டை குஜராத் டைட்டன்ஸ் அணி டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்றுள்ளது.
இது தொடர்பாக ஐபிஎல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: குஜராத் டைட்டன்ஸ் அணியால் ரூ.2.6 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு, அதே தொகைக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்கப்படுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 23 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ரூதர்ஃபோர்டு, கடந்த 2019 ஆம் ஆண்டு தில்லி கேபிடல்ஸ் அணிக்காகவும், கடந்த 2022 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காவும் விளையாடியிருக்கிறார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியிலும், கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலும் ரூதர்ஃபோர்டு இடம்பெற்றிருந்தபோதிலும், பிளேயிங் லெவனில் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.