

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் காயம் காரணமாக பேட்டிங்கில் பாதியிலேயே வெளியேறினார்.
கொல்கத்தாவில் நேற்று (நவ.14) தொடங்கிய இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸில் அந்த அணி 159க்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாம் நாளான இன்று இந்திய அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 39 ரன்கள் எடுத்தார்.
தெ.ஆ. அணியில் ஹார்மர் 4, யான்சென் 3, மகாராஜ், போஷ் தலா 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.
தற்போது, தெ.ஆ. அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. ஷுப்மன் கில்-க்கு பதிலாக படிக்கல் ஃபீல்டிங் செய்கிறார்.
தேநீர் இடைவேளை வரை 6.4 ஓவர்களில் தெ.ஆ. அணி 18/1 ரன்கள் எடுத்துள்ளது. மார்க்ரம் 3 ரன்களுடன் இருக்கிறார்.
ரியான் ரிக்கெல்டன் விக்கெட்டை குல்தீப் யாதவ் எடுத்து அசத்தினார்.
இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 12 ரன்கள் பின்னிலையில் இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.