

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து டிரேடிங் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸில் இணைந்த சஞ்சு சாம்சன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனுக்காக அணிகள் அனைத்தும் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்தும், விடுவிக்க விரும்பும் வீரர்களை விடுவித்தும் வருகின்றன. அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைக்க இன்றே கடைசி நாள். அணிகள் தங்களுக்குள் டிரேடிங் மூலமும் வீரர்களை மாற்றிக் கொள்கின்றனர்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டரான சஞ்சு சாம்சன் டிரேடிங் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் இருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விற்கப்பட்டுள்ளனர். ஐபிஎல் வரலாற்றில் டிரேடிங் மூலம் விற்கப்பட்ட மிகவும் முக்கியமான வீரர்களாக இவர்கள் மாறியுள்ளனர்.
பல ஆண்டுகளாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்த சஞ்சு சாம்சன், சிஎஸ்கேவில் இணைந்துள்ளதையடுத்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது: நாம் அனைவரும் இங்கு குறுகிய காலம் மட்டுமே இருக்கிறோம். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக என்னுடைய அனைத்து கடின உழைப்பையும் வழங்கினேன். ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய தருணங்கள் மறக்க முடியாதவை. அணியில் உள்ள அனைவரையும் என்னுடைய குடும்பத்தில் ஒருவராகவே நடத்தினேன். ராஜஸ்தான் அணியிலிருந்து விடைபெறக் கூடிய நேரம் வந்துவிட்டதால், செல்கிறேன். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நான் என்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கடந்த 2013 ஆம் ஆண்டு இணைந்த சஞ்சு சாம்சன், அந்த அணிக்காக 11 சீசன்களில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: டெஸ்ட் போட்டிகளில் ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.