டேரில் மிட்செல் சதம் விளாசல்; ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய நியூசிலாந்து!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Daryl Mitchell expresses joy after scoring a century
சதம் விளாசிய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய டேரில் மிட்செல்படம் | நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Published on
Updated on
1 min read

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று (நவம்பர் 16) நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து அணி முதலில் விளையாடியது.

டேரில் மிட்செல் சதம் விளாசல்

முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 269 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேரில் மிட்செல் சதம் விளாசி அசத்தினார். அவர் 118 பந்துகளில் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டெவான் கான்வே 49 ரன்களும், மைக்கேல் பிரேஸ்வெல் 35 ரன்களும் எடுத்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜேடன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளையும், மேத்யூ ஃபோர்டி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஜஸ்டின் கிரீவ்ஸ் மற்றும் ராஸ்டன் சேஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

வெற்றியுடன் தொடங்கிய நியூசிலாந்து

270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

அந்த அணியில் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு 61 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஜஸ்டின் கிரீவ்ஸ் 38 ரன்கள், சாய் ஹோப் 37 ரன்கள், கீஸி கார்ட்டி 32 ரன்கள் எடுத்தனர்.

நியூசிலாந்து தரப்பில் கைல் ஜேமிசன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மாட் ஹென்றி, ஸகாரி ஃபோல்க்ஸ் மற்றும் மிட்செல் சாண்ட்னர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசிய டேரில் மிட்செலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Summary

New Zealand won the first ODI against the West Indies by 7 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com