இலங்கைக்கு எதிரான தொடரை முழுமையாக (3-0) வென்றது பாகிஸ்தான்!

ஒருநாள் தொடரை முழுமையாக வென்ற பாகிஸ்தான் அணி குறித்து...
Pakistan's ODI team's skipper Shaheen Shah Afridi, second left, receives ODI series winning trophy at presentation ceremony on the end of the third one day international cricket match in Rawalpindi.
ஒருநாள் தொடரை வென்ற பாகிஸ்தான் கேப்டன். படம்: ஏபி
Published on
Updated on
1 min read

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி முழுமையாக வென்ற அசத்தியுள்ளது.

பாகிஸ்தானுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணி 3 ஒருநாள் போட்டிகள், முத்தரப்பு டி20 தொடர்களில் விளையாடுகிறது.

இதன்படி நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் பாகிஸ்தான் வென்றிருக்க, நேற்று கடைசி போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச, இலங்கை அணி 45.2 ஓவர்களில் 211 ரன்களில் ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக இலங்கை வீரர் சமரவிக்ரமாக 48 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் சார்பில் முகமது வாசிம் ஜூனியர் 3, பைசல் அக்ரம், ஹாரிஸ் ரௌஃப் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள்

அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 44.4 ஓவர்களில் 214/5 ரன்கள் எடுத்து வென்றது.

அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 61, ஃபகர் ஸமான் 55 ரன்களும் எடுத்தார்கள். இலங்கை சார்பில் ஜெஃப்ரி வண்டெர்ஸி 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

இதன்மூலம் ஒருநாள் தொடரினை பாகிஸ்தான் அணி 3-0 என வென்று அசத்தியுள்ளது.

கடைசி போட்டியின் ஆட்ட நாயகனாக முகமது வாசிம் ஜூனியரும் தொடர் நாயகனாக ஹாரிஸ் ரௌஃபும் தேர்வானார்கள்.

Summary

Pakistan has completed a comprehensive win in the ODI series against Sri Lanka.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com