வலுவான இந்திய அணி சொந்த மண்ணில் தோற்க காரணம் என்ன? புஜாரா கேள்வி!

வலுவான இந்திய அணி சொந்த மண்ணில் தோல்வியடைந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து முன்னாள் வீரர் சித்தேஷ்வர் புஜாரா கேள்வியெழுப்பியுள்ளார்.
captain shubman gill with head coach gautam gambhir
கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர்படம் | ஐசிசி
Published on
Updated on
2 min read

வலுவான இந்திய அணி சொந்த மண்ணில் தோல்வியடைந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து முன்னாள் வீரர் சித்தேஷ்வர் புஜாரா கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இந்தியாவை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.

கடந்த 15 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியாவில் தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில், வலுவான இந்திய அணி சொந்த மண்ணில் தோல்வியடைந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து முன்னாள் வீரர் சித்தேஷ்வர் புஜாரா கேள்வியெழுப்பியுள்ளார்.

Pujara
புஜாராபடம் | AP

இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் மாற்றத்தை சந்தித்து வரும் படிநிலையில் இருப்பதால், சொந்த மண்ணில் தோல்வியடைந்துவிட்டது எனக் கூறுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். வெளிநாடுகளில் விளையாடும் தொடர்களில் இந்திய அணி தோல்வியடைந்தால், இந்திய அணி மாற்றத்தை சந்தித்து வருவதால் தடுமாறுகிறது எனக் கூறலாம். அதுமட்டுமின்றி, இந்திய அணியில் முதல் தர கிரிக்கெட்டில் சிறந்த சாதனைகளை படைத்துள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், வாஷிங்டன் சுந்தர், ஷுப்மன் கில் போன்ற வீரர்கள் இருக்கின்றனர்.

சொந்த மண்ணில் வலுவான இந்திய அணி தோல்வியடைகிறது என்றால், ஏதோ தவறாக உள்ளது. முதல் போட்டி நல்ல ஆடுகளத்தில் விளையாடப் பட்டிருந்தால், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும். முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆடுகளம் போன்ற ஆடுகளங்களில் இந்திய அணி விளையாடினால், அணியின் வெற்றி வாய்ப்பு குறைந்துவிடும். மேலும், சொந்த மண்ணில் எதிரணிகள் இந்தியாவுக்கு நிகராக சமபலத்துடன் இருக்கும். சொந்த மண்ணில் இந்தியா ஏ அணி கூட வெற்றி பெற்றுவிடும். போட்டியை வெல்லும் திறன் வீரர்களிடத்தில் இல்லாமலில்லை. அதனால், இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் மாற்றத்தை சந்தித்து வருவதால் தோல்வியடைந்துவிட்டோம் எனக் கூறி தோல்வியை நியாயப்படுத்த முடியாது என்றார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், இதுமாதிரியான ஆடுகளத்தைதான் நாங்கள் கேட்டோம் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Former player Pujara has questioned the reason behind the strong Indian team's defeat on home soil.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com