முதல்தர போட்டிகளில் மிரட்டும் ருதுராஜ்..! மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கம் வெளியிட்ட போஸ்டர்!

ருதுராஜ் கெய்க்வாட்டிற்காக வெளியிடப்பட்ட சிறப்புப் போஸ்டர் குறித்து...
Ruturaj Gaikwad.
ருதுராஜ் கெய்க்வாட்.படம்: எக்ஸ் / எம்சிஏ
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கம் ருதுராஜ் கெய்க்வாட்டிற்காக சிறப்புப் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் தீயாக விளையாடிவரும் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

சிஎஸ்கே கேப்டனாக இருக்கும் ருதுராக் கெய்க்வாட் கடைசி சீசனில் காயம் காரணமான விளையாடாமல் இருந்தார்.

காயத்தில் இருந்து மீண்டுவந்த ருதுராஜ் சமீப காலங்களில் மிகவும் தீவிரமாக விளையாடி வருகிறார்.

85 போட்டிகளில் 4,509 ரன்கள் குவித்துள்ளார். அதில் 17 சதங்கள், 18 அரைசதங்கள் அடங்கும். சராசரி 57.08ஆக இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

அதிகபட்சமாக 220 ரன்களை ஆட்டமிழக்காமல் குவித்துள்ளார். இதனைப் பாராட்டும்படி ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு சிறப்புப் போஸ்டரை மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது.

Summary

The Maharashtra Cricket Association has released a special poster for Ruturaj Gaikwad.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com