கடந்த 100 ஆண்டுகளில் முதல் முறை; முதல் நாளிலேயே சூடுபிடித்த ஆஷஸ் டெஸ்ட் தொடர்!

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட்டின் முதல் நாளில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கடந்த 100 ஆண்டுகளில் முதல் முறை; முதல் நாளிலேயே சூடுபிடித்த ஆஷஸ் டெஸ்ட் தொடர்!
படம் | AP
Published on
Updated on
2 min read

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட்டின் முதல் நாளில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்று (நவம்பர் 21) தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 61 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஆலி போப் 46 ரன்களும், ஜேமி ஸ்மித் 33 ரன்களும் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அவரைத் தொடர்ந்து, பிரண்டன் டக்கெட் 2 விக்கெட்டுகளும், கேமரூன் கிரீன் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் அதிகட்சமாக அலெக்ஸ் கேரி 26 ரன்களும், கேமரூன் கிரீன் 24 ரன்களும் எடுத்தனர். டிராவிஸ் ஹெட் 21 ரன்களும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 17 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். பிரைடான் கார்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 49 ரன்கள் பின் தங்கியுள்ளது.

100 ஆண்டுகளில் முதல் முறை

பெர்த்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தனித்துவமான சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது. ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பெர்த்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக முதல் நாளில் 19 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளன.

ஆஷஸ் தொடரில் கடந்த 100 ஆண்டுகளில் முதல் நாளில் வீழ்த்தப்பட்ட அதிக விக்கெட்டுகள் விவரம்

பெர்த் திடல் (2025) - 19 விக்கெட்டுகள் (இங்கிலாந்து - 10, ஆஸ்திரேலியா - 9)

டிரெண்ட் பிரிட்ஜ் (2001) - 17 விக்கெட்டுகள் (இங்கிலாந்து - 10, ஆஸ்திரேலியா - 7)

லார்ட்ஸ் (2005) - 17 விக்கெட்டுகள் (ஆஸ்திரேலியா - 10, இங்கிலாந்து - 7)

Summary

A new record has been set on the first day of the first Test of the Ashes series between England and Australia.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com