நவ. 23-ல் திருமணம்..! விடியோ வெளியிட்டு உறுதிசெய்த ஸ்மிருதி மந்தனா.!

இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதை விடியோ வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளதைப் பற்றி...
ஸ்மிருதி மந்தனா - பலாஷ் முச்சல்.
ஸ்மிருதி மந்தனா - பலாஷ் முச்சல்.
Published on
Updated on
1 min read

இந்திய மகளிரணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதை விடியோ வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் மகளிரணியின் துணை கேப்டனும், நட்சத்திர வீராங்கனையுமான ஸ்மிருதி மந்தனா, சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். 9 ஆட்டத்தில் ஆடிய மந்தனா ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 434 ரன்கள் குவித்தார்.

மகாராஷ்டிரத்தை சேர்ந்த 29 வயதான ஸ்மிருந்தி மந்தனா, பிரபல ஹிந்தி இசையமைப்பாளரான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பலாஷ் முச்சலை நீண்ட காலமாக காதலித்து வருகிறார்.

பலாஷ் முச்சலுடன் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்துகொண்டதை விடியோ வெளியிட்டு ஸ்மிருதி மந்தனா உறுதிபடுத்தியிருந்தார்.

இந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் வருகிற 23 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்து வாழ்த்து மடல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இவர்களது திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி இரு வீட்டாருக்கும் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.

திருமணத்துக்கான தேதி, இடம் குறித்து இந்த ஜோடி இன்னும் வெளிப்படுத்தாத நிலையில், பிரதமர் மோடி வாழ்த்து மடல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

முன்னதாக, ஸ்மிருதி மந்தனாவின் நிச்சயமானதை உறுதிபடுத்தும் விதமாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் அருந்ததி ராய் இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷ்ரேயங்கா பாட்டீல் மற்றும் ராதா யாதவ் ஆகியோருடன் நடனமாடுவது போன்ற விடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

அந்த விடியோவில், முன்னாபாய் படத்தில் வரும் ‘சம்ஜோ ஹோ ஹி கயா..’ பாடலுடன் விடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

மண வாழ்க்கை என்னும் 2-வது இன்னிங்ஸை துவங்கியுள்ள ஸ்மிருதி மந்தனாவுக்கு, கிரிக்கெட் வீரர், வீராங்கனைகள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் சமூகவலைதளங்கள் மூலமாக வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்மிருதி மந்தனா - பலாஷ் முச்சல்.
மணல் காகித மோசடி பற்றி இங்கிலாந்து வீரர் கருத்து... தனது ஸ்டைலில் நக்கலாக பதிலடி கொடுத்த ஸ்மித்!
Summary

Smriti Mandhana and Palash Mucchal, wedding on November 23

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com