இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தேநீர் இடைவேளையின்போது, தென்னாப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்திருந்தது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி குவாஹாட்டியில் இன்று (நவம்பர் 22) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் தென்னாப்பிரிக்க அணி தேநீர் இடைவேளையின்போது, ஒரு விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்திருந்தது.
தொடக்க ஆட்டக்காரர்களான அய்டன் மார்க்ரம் மற்றும் ரியான் ரிக்கல்டான் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தது. இருப்பினும், அய்டன் மார்க்ரம் 38 ரன்களிலும், ரியான் ரிக்கல்டான் 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அய்டன் மார்க்ரமின் விக்கெட்டினை ஜஸ்பிரித் பும்ரா வீழ்த்திய நிலையில், ரிக்கல்டானின் விக்கெட்டினை குல்தீப் யாதவ் வீழ்த்தினார்.
தென்னாப்பிரிக்க அணி அதன் முதல் இன்னிங்ஸில் 100 ரன்களைக் கடந்து நிதானமாக விளையாடி வருகிறது. கேப்டன் டெம்பா பவுமா மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
At the tea break in the second Test against India, South Africa were 82 for one.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாகிஸ்தானை சொந்த மண்ணில் முதல்முறையாக ஒயிட்வாஷ் செய்தது வங்கதேச அணி!

முதல் டெஸ்ட்: பாகிஸ்தானை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 5000 ரன்களைக் கடந்த மூன்றாவது வங்கதேச வீரர்!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: வங்கதேசம் 179 ரன்கள் முன்னிலை!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




