

ஆஷஸ் டெஸ்ட் தொடர் வரலாற்றில் இரண்டாவது அதிவேக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை டிராவிஸ் ஹெட் படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 205 ரன்களை வெற்றி இலக்காக இங்கிலாந்து அணி நிர்ணயித்துள்ள நிலையில், வெற்றி இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
205 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணி மிகவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி துரத்தி வருகிறது. ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் அதிரடியில் மிரட்டினார். அதிரடியாக விளையாடிய அவர் 69 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
69 பந்துகளில் சதம் விளாசியதன் மூலம், ஆஷஸ் டெஸ்ட் தொடர் வரலாற்றில் அதிவேக சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை டிராவிஸ் ஹெட் படைத்துள்ளார். மேலும், சேஸிங்கில் நான்காவது இன்னிங்ஸில் அதிவேக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையையும் டிராவிட் ஹெட் படைத்துள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் 57 பந்துகளில் சதம் விளாசியதே ஆஷஸ் வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிவேக சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.