

தென்னாப்பிரிக்க வீரர் செனுரன் முத்துசாமி தனது முதல் சதத்தினை அடித்து அசத்தியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இந்த சதத்தினை பதிவு செய்தார்.
குவாஹாட்டியில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட்டில் டாஸ் வென்ற தெ.ஆ. அணி பேட்டிங் செய்து வருகிறது.
இந்த அணி 144 ஓவர்களில் 467/ 9 ரன்கள் குவித்துள்ளது. இதில், ஆல்ரவுண்டரான செனுரன் முத்துசாமி தனது முதல் டெஸ்ட் சதத்தினை பதிவு செய்துள்ளார்.
இவரது பூர்வீகம் தமிழகத்தில் உள்ள நாகப்பட்டினம் என்பதால் இவரது சதத்தினை தமிழக இந்திய ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவுக்கு எதிராக 2019-இல் அறிமுகமான இவர் பாகிஸ்தான் தொடரில் சிறப்பாக செயல்பட்டார்.
யார் இந்த செனுரன் முத்துசாமி?
தென்னாப்பிரிகாவில் 1994-இல் பிப்.22ஆம் தேதி செனுரன் முத்துசாமி பிறந்தார்.
இவரது பூர்வீகம் நாகப்படினத்தில் இருக்கிறது. தமிழக கலாசாரத்தை தொடர்ந்து பின்பற்றி வருகிறார்.
சமூக அறிவியலில் பட்டம் பெற்ற செனுரன் முத்துசாமி பள்ளியில் தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார்.
அவர் பிறந்த ஊரில் யு-11, யு-19 அளவில் சிறப்பாக செயல்பட்டு பின்னர் தென்னாப்பிரிக்காவின் தேசிய அணிக்குத் தேர்வானார்.
யு-19-இல் அவர் டாப் ஆர்டர் பேட்டராக விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.